இலங்கை தென்பகுதியில் ஆறு மாதத்தில் 144பேர் கடத்தல் சித்திரவதையின் பின் 40பேர் விடுதலை
பொலிஸ் மற்றும் முப்படையினருக்கும் அப்பால் ஆட்களை கடத்துவதற்கென சீருடையணிந்த மற்றுமொரு கும்பல் இயங்கி வருகின்றமையை அண்மைக்கால கடத்தல்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளதாக பிரதிஅமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் 26ம் திகதிவரையிலான காலப்பகுதியில் 144பேர் கடத்தப்பட்டமை குறித்து எனக்கு தகவல் கிடைத்துள்ளது இவர்களில் 40பேர் பாரிய சித்தரவதைகளுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் மேலும் 15பேர் பொலிஸ் தடுப்பு காவலரண்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் மற்றைய 29பேருக்கு நடந்ததென்னவென்று தெரியாமல் இருக்கிறது தற்போதைய கடத்தல்களில் பெரும்பாலானவை பாதுகாப்பு சீருடை அணிந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை வெளிப்படையானது இதனால் அரசாங்கத்திற்கும் அவப்பெயர் ஏற்ப்பட்டுள்ளது. சீருடையணிந்தவர்களால் மெற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating