இலங்கையில் இந்த வகையான வாகனங்கள் இறக்குமதிக்கு தடை!!

Read Time:1 Minute, 33 Second

ஆசனப்பட்டி மற்றும் காற்றுடன்கூடிய பாதுகாப்பு பலூன் போன்ற பாதுகாப்பு முறைகள் இல்லாத வாகனங்களின் இறக்குமதிகளுக்கு ஜுலை மாதம் 01ம் திகதி முதல் தடை விதிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அறிக்கையொன்றினூடாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு இன்று இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

இதற்கமைய, ஜுலை மாதம் 01ம் திகதிக்குப் பின்னர் இறக்குமதி செய்யப்படுகின்ற வாகனங்களில் முன் மற்றும் பின்னால் உள்ள ஆசனங்களில் பயணிப்பவர்களுக்கான ஆசனப்பட்டிகள் மற்றும் காற்றுடன்கூடிய பலூன் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டிருந்து.

எனினும் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த தீர்மானம் பிற்போடப்பட்டதாக நிதி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வித்தியாசமான சூரிய ஒளிவட்டம்! (வீடியோ)
Next post சுமந்திரன் சுற்றும் வாளும், அகப்படும் ஊடகங்களும்.. -புருஜோத்தமன் தங்கமயில் (சிறப்புக் கட்டுரை)