புருஸ் லீ வாழ்க்கையை படமாக்கும் இந்திய இயக்குனர்!!

Read Time:1 Minute, 55 Second

ஹாலிவுட் நடிகர்களுக்கு சவால்விட்டு அதிரடியாக களத்தில் குதித்தவர் புருஸ்லீ. 70களில் இவரது ஆதிக்கம்தான் நிலவியது. அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. அது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தீர்க்கப்படாமலே உள்ளது. அவரை மையமாக வைத்து பல்வேறு கதைகள் வந்திருந்தாலும் அவரது வாழ்க்கை வரலாறு இதுவரை படமாகவில்லை. முதன்முறையாக புருஸ்லீ வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குகிறார் 71 வயதான பாலிவுட் இயக்குனர் சேகர் கபூர். இப்படத்துக்கு லிட்டில் டிராகன் என பெயரிடப்பட்டிருக்கிறது. சீன மொழியில் இப்படம் உருவாகவிருக்கிறது. இதுகுறித்து சேகர் கபூர் கூறும்போது,’இப்படத்தின் கதையை புருஸ்லியின் மகள் ஷன்னான் லீ எழுதுகிறார்.

அதற்கு நான் திரைக்கதை அமைக்கிறேன். இந்திய சினிமாவுக்கு சீனாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. ‘தங்கல்’ இந்தி படம் அதை நிரூபித்தது. புருஸ்லீ படத்தில் புதுமுக நடிகர்கள் நடிக்க உள்ளனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் நடிக்கிறார். கடந்த 15 வருடமாக இந்த திரைக்கதை மீது நான் பணியாற்றி வருகிறேன்’ என்றார். அமெரிக்கா சீனா கூட்டுத் தயாரிப்பாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு பல்வேறு சீன கம்பெனிகள் முதலீடு செய்யும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பத்தை அறிவித்த நியூசிலாந்து பிரதமர்!!
Next post கருகரு கூந்தலுக்கு கற்றாழை ஜெல்!!