காதலரை மணந்தார் பாவனா! (திருமணம்)

Read Time:4 Minute, 16 Second

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பிரபல நடிகை பாவனா. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகம் ஆன பாவனா தொடர்ந்து அஜீத்துடன் அசல் என்ற படத்தில் நடித்தார். ஜெயம் கொண்டான், தீபாவளி, ராமேஸ்வரம், கூடல்நகர், வெயில், கிழக்கு கடற்கரை சாலை, வாழ்த்துக்கள் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் கடந்த 2012-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ரோமியோ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்போது அந்த படத்தின் தயாரிப்பாளர் நவீனுடன் பாவனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறியதால் அவர்கள் 2 பேரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்கள் காதல் விவகாரம் முதலில் சமூக வலைதளங்கள் மூலமே பரவியது. முதலில் தங்கள் காதலை மறுத்த இவர்கள் பிறகு அதை ஒத்துக்கொண்டனர். அதன்பிறகு நடிகை பாவனா – நவீன் வீட்டார் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாவனா – நவீன் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடந்தது. பாவனாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான நடிகை மஞ்சுவாரியர் உள்பட மிக முக்கியமான 16 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். அதை தொடர்ந்து அவர்கள் திருமணத்தை விரைந்து முடிக்க இருவீட்டாரும் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் நடிகை பாவனாவின் தந்தை பாலச்சந்திரனின் திடீர் மறைவு போன்ற சில காரணங்களால் பாவனாவின் திருமணம் தள்ளிப்போனது.

இதன்பிறகு பாவனா வீட்டாரும், நவீன் வீட்டாரும் கலந்து பேசி இன்று (22-ந்தேதி) திருமணம் நடத்துவது என்று முடிவு செய்தனர். இதையொட்டி நேற்று திருச்சூரில் உள்ள நடிகை பாவனா வீட்டில் பாவனாவுக்கு மருதாணி வைக்கும் மெகந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. பாவனாவின் தோழியான நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் நெருங்கிய தோழிகள் இதில் பங்கேற்றனர்.

இதைதொடர்ந்து திருச்சூரில் உள்ள திருவம்பாடி ஆலயத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடிகை பாவனா – நவீன் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பலர் ஆர்வமாக இருந்தாலும் மிகமுக்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள், திரையுலகினரை மட்டுமே தனது திருமணத்திற்கு நடிகை பாவனா அழைத்திருந்ததால் அவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பாவனாவின் தோழி நடிகை ரம்யா நம்பீசன், பாடகி சயனோரா ஆகியோர் திருமண நிகழ்ச்சியில் முக்கிய பங்கேற்றனர்.

திருமணம் முடிந்ததும் ஜவகர்லால் கண்வென்சன் சென்டரில் திருமணத்திற்கு பிறகான விருந்து மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று மாலை நடிகை பாவனா திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் திருச்சூர் லூலூ சென்டரில் நடைபெறுகிறது.

திருமண வரவேற்பில் மலையாள திரையுலகை சேர்ந்த முக்கிய நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அசாத்தியமான சக்தியை கொண்ட 6 மனிதர்கள் …!!(வீடியோ)
Next post தக்காளிச் செடிகளுக்குள் கஞ்சா செடி வளர்த்தவர் விளக்கமறியலில்!!