தமிழ் தேசிய ஜனநாயக கூட்டமைப்பின் (TDNF)முக்கியஸ்தர்கள் SWISS “வீரமக்கள் தினம்” நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளனர்

Read Time:1 Minute, 48 Second

ஜூலை 5ஆம் திகதி எதிர்வரும் சனிக்கிழமை சுவிற்சர்லாந்தில் தமிழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்)த்தின் சர்வதேச கிளைகள் ஏற்பாடு செய்துள்ள “வீரமக்கள் தினம்” நிகழ்வில் தமிழ் தேசிய ஜனநாயக கூட்டமைப்பின் (TDNF)முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசிய ஜனநாயக் கூட்டமைப்பில் போட்டியிட்டு கிழக்கு மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட EPRLFதலைவர் ரி.துரைரட்ணம், மேற்படி கூட்டமைப்பின் அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (புளொட் பவன்) ஆகியோரே “வீரமக்கள் தினம்” நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளனர். சனிக்கிழமை இரவு நோர்வேக்கு பயணம் செய்துள்ள இவர்கள் அங்கு அந்நாட்டின் அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம், விசேட தூதுவர் ஹன்சன் பவர் உட்பட அங்குள்ள மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள் ஆகியோரையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துராயடவுள்ளனர். இதனையடுத்து ஜேர்மன், பிரான்ஸ், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post மைக்ரோசாப்ட் தலைவர் பதவியில் இருந்து பில்கேட்ஸ் கண்ணீர் மல்க விடைபெற்றார்