பூனையின் புகைப்பட வழக்கில் 4 கோடி சம்பாதித்த பெண்!!

Read Time:1 Minute, 35 Second

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த டபாத்தா பண்ட்சி என்ற பெண்ணின் வளர்ப்பு பூனையின் புகைப்படத்தை ஒரு காபி நிறுவனம் விளம்பரத்திற்காக பயன்படுத்தியது. இந்த பூனை கடந்த 2012-ம் ஆண்டு இணையதளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படம் மூலம் மிகவும் பிரபலமானது. கோபத்துடன் இருக்கும் பூனையின் முகத்தை அனைவரும் பார்த்து ரசித்தனர்.

இந்நிலையில், கிரனேட் பிவரேஜ் என்ற நிறுவனம் பூனையின் புகைப்படத்தை குளிர்பானம் விளம்பரத்திற்கு பயன்படுத்தப் போவதாக உரிமையாளர் பண்ட்சியிடம் அனுமதி பெற்றது. ஆனால் அனுமதி இல்லாமல் பல பொருட்களின் விளம்பரத்திற்கு பயன்படுத்தியதால் அந்நிறுவனம் மீது மூன்று ஆண்டுகளுக்கு முன் காப்புரிமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பண்ட்சிக்கு 4 கோடி ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தனது வளர்ப்பு பூனையின் மூலம் பெண் 4 கோடி ரூபாய் சம்பாதித்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் இரண்டு வேட்பாளர்கள் மீது தாக்குதல்!!
Next post நைட் தூங்கும் போது இத போடுங்க.. சீக்கிரம் வெள்ளையாகிடுவீங்க…!!