நடிகரை வெளுத்து வாங்கிய நீது சந்திரா!!

Read Time:2 Minute, 0 Second

தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன், யுத்தம் செய், சேட்டை, திலகர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. பீகாரை சேர்ந்த இவர் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். போஜ்புரி மொழியில் ‘தேஸ்வா’ உள்பட 2 படங்கள் தயாரித்திருக்கிறார். பல்வேறு விஷயங்களில் இவர் தனது கருத்துக்களை துணிச்சலுடன் சொல்லக் கூடியவர். தனது தாய் மொழி போஜ்புரி பற்றி பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது நக்கலடித்தார்.

அதைக்கேட்டு கோபம் அடைந்தார் நீது. இணைய தள பக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவை வெளுத்து வாங்கினார். அவர் கூறும் போது, ‘நீங்கள் (சித்தார்த் மல்ஹோத்ரா) பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். போஜ்புரி மொழிபற்றி நீங்கள் செய்த விமர்சனத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை.

கழிவறையில் இருக்கும் உணர்வு ஏற்படுவதாக நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன் என குறிப்பிட்டிருக்கிறார். நீதுவின் கருத்துக்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்திருப்பதுடன், சித்தார்த் மல்ஹோத்ராவை கழுவி ஊற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரோ நீதுவுக்கு பதில் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நைட் தூங்கும் போது இத போடுங்க.. சீக்கிரம் வெள்ளையாகிடுவீங்க…!!
Next post 2 கோடி பெறுமதியான போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது!!