சுமத்ராவில் நிலநடுக்கம்
Read Time:42 Second
இந்தோனேசியத் தீவான சுமத்ராவில் சனிக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியது. பூகம்பத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பூகம்ப பாதிப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் தெரியவில்லை. சுமத்ரா தீவின் வடபகுதியில் உள்ள பண்டா ஆசியிலிருந்து 77 கிலோமீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.