உலகிலேயே மிகப்பெரிய பால்கன் ஹெவி ராக்கெட்: காருடன் விண்ணில் பாய்ந்தது!!

Read Time:3 Minute, 6 Second

அமெரிக்காவில் உலகிலேயே மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த பால்கான் ஹெவி ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தியது. அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ராக்கெட் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் நேற்று முன்தினம் உலகிலேயே மிகப்பெரிய சக்தி வாய்ந்த “பால்கன் ஹெவி” ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. புளோரிடா மாகாணத்தில், கேப் கேனவரல் நகரில் உள்ள ஜான் கென்னடி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டின் உயரம் 239 அடியாகும் (70 மீட்டர்). 64 மெட்ரிக் டன் எடையை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

வழக்கமாக ராக்கெட்டுக்களில் செயற்கைக்கோள் வைத்து அனுப்பப்படும். ஆனால், இது சோதனை ராக்கெட் என்பதால் செயற்கைகோளுக்கு பதிலாக தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்கின் டெஸ்லா ரோட்ஸ்டரின் கார் வைத்து செலுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் மதிப்பு ரூ.64 லட்சம். இந்த காரில் பொம்மை டிரைவர் அமரவைக்கப்பட்டு அவருக்கு விண்வெளி உடை அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் அடுத்த 6 மாதங்களில் செவ்வாய் கிரகத்துக்கு அருகே உள்ள சுற்று வட்டப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ராக்கெட் செலுத்தப்பட்டதை அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா கண்காணித்து வருவதாகவும், தனது திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான ஒரு வழியாக பால்கன் ஹெவியை பயன்படுத்து வது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசாவின் பொறுப்பு நிர்வாகி ராபர்ட் லைட்புட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை பாராட்டியுள்ளார். “இது மிகப்பெரிய சாதனை” என்றும் தெரிவித்துள்ளார்.
கனடா விண்வெளி வீரர் கிரைஸ் ஹாட்பீட்ல் தனது டிவிட்டர் பக்கத்தில், “ ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்ற அனைத்து ராக்கெட் நிறுவனங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டது. ஒவ்ெவாருவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியா முகப்பு > செய்திகள் > இந்தியா ராஜஸ்தானில் விபத்தில் ஒருவர் பலி : லாரி மீது கார் மோதல்… பிரதமர் மனைவி காயம்!!
Next post பாதுகாப்பற்ற முறையிலான ரத்த பரிமாற்றத்தால் இந்தியாவில் அதிகரிக்கும் எச்,ஐ.வி : 6வது இடத்தில தமிழகம் !!