சட்டவிரோத இறுவட்டு தயாரிப்பு நிலையம் முற்றுகை

Read Time:1 Minute, 53 Second

சட்டவிரோத இறுவட்டுகளை தயாரிக்கும் நிலையங்கள் இரண்டை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர் இந்த இறுவட்டுதயாரிப்பு நிலையங்கள் குறித்து புலனாய்வுப்பிரிவு மூலம் கிடைத்த தகவலையடுத்தே இந்த முற்றுகை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் நீர்கொழும்பு மற்றும் மாராவில பகுதியிலேயே இந்த முற்றுகை மேற்கொள்ளப் பட்டுள்ளதோடு இங்கிருந்து ஆயிரக்கணக்கான இறுவட்டுக்களும் கைப்பற்றப் பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர் சம்பவம் தொடர்பில் எட்டுபேர் கைது செய்யப் பட்டுள்ளதோடு அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் இதேவேளை சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட இந்த இறுவெட்டுக்களின் நிஜ தயாரிப்பாளர்கள் யாரென அடையாளம் காண முடியாமல் இருப்பதால் விசாரணைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர் சிங்கள திரைப்பட தயாரிப்பாளர்களில் ஈடுபட்ட எவரேனும் தங்கள் படங்கள் சட்டவிரோதமாக பிரதி பண்ணப்பட்டிருப்பதாக எண்ணினால் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் தொடர்பு கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொத்தி உபாலி கொலைச் சந்தேக நபர் விடுதலை
Next post குஜராத்தில் ஆசிரியர்களால் கற்பழிக்கப்பட்ட மாணவி மயக்கம்