விஷக்கடிகள் எளிய வழிகள்!!

Read Time:3 Minute, 40 Second

பூச்சிகள், பாம்பு ஆகியவை கடித்தால் உடனே கவனிக்க வேண்டும். பூச்சிகளினால் உடலுக்குள் வரும் விஷம் உடலை பல வகையில் பாதிக்கும் எனவே விஷப்பூச்சிகள் கடித்தால் மிகவும் கவனமாக அதற்குரிய மருந்துகளை எடுத்துக் கொள்ளவேண்டும் இல்லையெனில் பூச்சிகளால் உடலுக்குள் செல்லும் விஷம் பல பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். விஷப்பூச்சிகள் குணமாக என்ன வழியென்று பார்ப்போமா.
* மஞ்சள், மர மஞ்சள் இவ்விரண்டையும் விழுதாக்கிப் பூசவும் உட்கொள்ளவும் பயன்படுத்தினால் பாம்புக்கடியின் நஞ்சு தனிந்துவிடும்.

* பூவரசம் பூக்களைக் கஷாயம் வைத்து காலை, மாலை இரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் விஷப்பூச்சிக்கடி. சாரைக்கடி ஆகியவை குணமாகும். இந்த கஷாயம் சாப்பிடும் நாளில் கடுகு, எண்ணெய் தாளிப்பு இல்லாத பத்திய உணவு உண்ண வேண்டும்.
* கருவேலம் பூக்களை கொண்டு வந்து அரைத்து தண்ணீரில் கலந்து வடிக்கட்டி குடித்தால் தேள் கடி விஷம், பாம்பு விஷம், வெறி நாய்க்கடி விஷம் குணமாகும். கறிவேப்பிலையை அரைத்து மேல்பூச்சாக உபயோகப்படுத்தினால் கொப்புளம், விஷக்கடிகள் சரியாகும்.தேங்காய்ப் பாலில் வெல்லத்தை கலந்து குடித்தால் தேள்கடி விஷம் இறங்கும்.

* மாம்பூவை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அதை புகைப்போட்டுவர வீட்டில் கொசுத்தொல்லை குறைந்துவிடும்.
* வேப்பங்கொழுந்தை அரைத்து சுழற்சிக்காய் அளவு எடுத்து சாப்பிட்டால் பூராண் கடியால் ஏற்பட்ட விஷம் தீர்ந்து விடும் உடல் ஆட்டுப்பால் சாப்பிட வேண்டும்.

* சுத்தமான நீரில் உப்பைக் கரைத்து வடிகட்டி வலது பக்கம் கொட்டினால் இடது கண்ணிலும் இடது பக்கம் கொட்டினால் வலது கண்ணிலும் இரண்டொரு சொட்டுக்கள் விட்டால் தேள்கடி சரியாகும்.கம்பளிப்பூச்சியால் ஏற்பட்ட அரிப்பு வெற்றிலையை அழுத்தி தேய்த்தால் சிறிது நேரத்தில் குணமாகிவிடும், தேள் கடித்த இடத்தில் படிக்காரத் தூளைத் தடவி உள்ளுக்குள் ஒரு மிளகளவு இதே தூளை 3 நாட்கள் கொடுத்துவர விஷம் ஒழியும்.
* கரிசலாங்கண்ணி இலையை இடித்துச் சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் சாற்றை மோரில் கலந்து குடித்தால் பாம்புக்கடி விஷம் இறங்கிவிடும். தும்பைச்சாறு ஒரு ஸ்பூன் கலந்து கொடுத்துவிட்டு கொட்டு வாயில் இலையை அரைத்துக் கட்டினால் தேளின் நஞ்சு இறங்குவதுடன் கடு கடுப்பும் நீங்கும். நாயுருவி இலையை கசக்கித் தேய்க்க தேளின் விஷம் இறங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகள்!!
Next post மஹிந்த இருந்த இடத்திலேயே; ​​ஐ.தே.க தான் சரிந்தது!!