பரோட்டா தரும் பகீர் ரிப்போர்ட்…!
தென்னிந்தியாவில் எந்த உணவகத்துக்கு சென்றாலும், பரோட்டாவின் பெயரை உச்சரிக்காத ஓட்டல் சர்வர்கள் இருக்க மாட்டார்கள். மைதாவில் உருவாகும் இந்த பரோட்டா பல நோய்களின் கதவுகளை திறக்கிறது என்கிறார்கள் டாக்டர்கள். பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட மைதா, நம் நாட்டில் மட்டும் சுதந்திரமாக சுற்றித்திரிகிறது. இது தரும் ஆபத்துகள் பல. அதன் விவரம் இதோ….
சர்க்கரை நோய்: மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு அதிகம். அதாவது, சாப்பிட்டவுடன், விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய முக்கிய உணவு பரோட்டா.
சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் திறனை ஆய்வு செய்வதற்காக, ஆய்வக விலங்குகளில் செயற்கையாக சர்க்கரைநோயை உண்டாக்க பயன்படும் பொருள்தான் அல்லோக்ஸான். ஆக, மைதாவின் துணையோடு செய்யப்படும் பரோட்டாக்களை அதிகளவில் சாப்பிட்டுவந்தால், சர்க்கரைநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதய நோய்: இன்றைக்கு சர்க்கரைநோய், உடல் பருமன் போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்திருப்பதற்கு, பல்வேறு காரணங்களோடு, பரோட்டாவையும் ஒரு காரணமாக சொல்லலாம். சத்துகள் ஏதுமில்லாத, வெற்று கலோரிகளை மட்டுமே கொடுக்கும் மைதாவின் குழந்தையான பரோட்டா, உடல் எடையை கூட்டும். அதுவும் குழந்தை பருவம் முதலே பரோட்டாவுக்கு ரசிகராக இருப்பவர்களுக்கு இளவயது உடல் பருமன் நிச்சயம். எண்ணெயில் பொரித்த மைதா சார்ந்த உணவுகள், கெட்ட கொழுப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதய நோய்களையும் உண்டாக்கலாம்.
மலச்சிக்கல் : உடலுக்கு தேவையான நார்ச்சத்து இல்லாமல் இருப்பதாலும், மைதா சேர்த்த உணவுகளை ஆரோக்கியத்துக்கு எதிராக பார்க்கவேண்டியிருக்கிறது. மலச்சிக்கலை உருவாக்குவதில் மைதாவுக்கு முக்கிய பங்குஉண்டு.
குடல் பகுதியில் பசைபோல உருவாகி, செரிமானத்துக்கு தடங்கலை ஏற்படுத்துவதால், மைதாவை செல்லமாக ’Glue of the gut’ என்று அழைக்கின்றனர். குடலின் இயக்கத்தை மந்தமாக்கி மலச்சிக்கலை உண்டாக்கும். காரசாரமான குருமாவோடு சேர்த்து மூன்று பரோட்டாக்களை சாப்பிட்ட பிறகு, வயிற்றுக்குள் உண்டாகும் செரிமான சண்டைகளை கவனித்திருக்கிறீர்களா? தவறியவர்கள் இனிமேல் கவனியுங்கள்!
Average Rating