அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் 2ம் வகுப்பு குழந்தைகளை காத்த தமிழக ஆசிரியையின் துணிச்சல்!!

Read Time:1 Minute, 49 Second

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 2ம் வகுப்பு குழந்தைகளை காப்பாற்றிய தமிழகத்தை சேர்ந்த ஆசிரியையை அனைவரும் பாராட்டி உள்ளனர். அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மென் டக்லஸ் என்ற பள்ளியில் கடந்த காதலர் தினத்தன்று, முன்னாள் மாணவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சம்பவத்தின்போது சாமர்த்தியமாக செயல்பட்டு தன் வகுப்பு மாணவர்களை காப்பாற்றிய சாந்தி விஸ்வநாதன் என்ற தமிழகத்தை சேர்ந்த ஆசிரியையின் துணிச்சல் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது.

துப்பாக்கிச்சூட்டின்போது, எச்சரிக்கை அலாரம் அடித்ததையடுத்து, கணித ஆசிரியையான சாந்தி விஸ்வநாதன், தான் பாடம் நடத்திக் கொண்டிருந்த 2ம் வகுப்பின் கதவு மற்றும் ஜன்னல்களை முற்றிலும் மூடிவிட்டு, மாணவர்களை மேஜை மற்றும் நாற்காலிகளுக்கு அடியில் படுக்க வைத்துள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞன், வகுப்பறை மூடியிருந்ததால் அங்கு யாரும் இல்லை என்று நினைத்து கடந்து சென்றுள்ளான். இதன்மூலம், தனது வகுப்பு மாணவர்களை சாந்தி விஸ்வநாதன் துணிச்சலாக காத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்தவர் கைது!!
Next post கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருளுடன் 27 பேர் கைது!!