ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பயணிகள் விமானம் விபத்து : 100 பேர் உயிரிழப்பு?

Read Time:2 Minute, 8 Second

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து யாசுஜ் நோக்கி சென்ற பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 100 பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது மாயமான விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது.

தெஹ்ரானில் இருந்து யசூஜ் பகுதிக்கு 100 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. அது புறப்பட்ட 20 நிமிடங்களுக்கு ரேடாரின் தொடர்பழை இழந்தது. ரேடார் குறியீடுகளை வைத்து பார்க்கும் போது விமானம் அவசர அவசரமாக தரையிறங்க முயற்சித்தது தெரியவந்தது.எனினும ஜாக்ரோஸ் மலை பகுதியில் அது விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விமானம் நொறுங்கி விழுந்த பகுதி மலைப்பாங்கான பகுதி என்பதால் அங்கு ஆம்புலன்ஸ் வாகனங்களை நேரடியாக இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த 100 பேரும் இறந்திருக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றன. மிகப் பெரிய விமான நிறுவனமான ஆசிமான் விமான நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருளுடன் 27 பேர் கைது!!
Next post பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் குறித்து 15 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை!!