அங்க போயும் ஆக்சிடெண்டா? பூமி மீது மோதப்போகும் டெஸ்லா கார்!!

Read Time:2 Minute, 11 Second

கடந்த சில நாட்களுக்கு முன் விண்ணில் செலுத்தப்பட்ட பால்கன் ஹெவி ராக்கெட்டில் அனுப்பப்பட்ட டெஸ்லா கார், பூமி மீது மோதுவதற்கான வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த 6ம் தேதி உலகிலேயே மிகப்பெரிய சக்தி வாய்ந்த “பால்கன் ஹெவி” ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. புளோரிடா மாகாணத்தில், உள்ள ஜான் கென்னடி ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோக் மஸ்கின் ரூ.1 கோடி மதிப்புள்ள டெஸ்லா கார் அனுப்பப்பட்டது.

இந்த டெஸ்லா கார் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்க வேண்டும். ஆனால், ராக்கெட் அதிகப்படியான உயரத்துக்கு கொண்டு சென்று இந்த காரை கழற்றிவிட்டதால், அது இப்போது பூமியை சுற்றிக் கொண்டிருக்கிறது. தற்போது 300 கி.மீ. வேகத்தில் இந்த கார் சுற்றிக் கொண்டிருக்கின்றது.
இந்த கார் 2091ம் ஆண்டு மீண்டும் பூமிக்கு அருகில் வரும். அப்போது பூமி மீது கண்டிப்பாக மோதும் அபாயம் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பூமி மீது டெஸ்லா கார் மோதுவதற்கு 6 சதவீத வாய்ப்பு இருப்பதாகவும், வெள்ளி மீது மோதுவதற்கு 2 சதவீத வாய்ப்புள்ளதாகவும், 3 ஆண்டுகளுக்குள் டெஸ்லா கார் நொறுங்கி உடைவதற்கான வாய்ப்புள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஷால் மருத்துவமனையில் அனுமதி… !!
Next post அடர்த்தியான புருவங்களை பெற சில டிப்ஸ்!