பந்து வீசியவரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த பந்து! (வீடியோ)

Read Time:1 Minute, 45 Second

நியூசிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வினோதமான ஒரு சிக்சர் அடிக்கப்பட்டது. போர்டு கிண்ணத்துக்கான 3-வது இறுதி சுற்றில் ஆக்லாந்து-கான்டெர்பரி அணிகள் மோதின. இதில் ஆக்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

19-வது ஓவரில் ஆக்லாந்து இடக்கை ஆட்டக்காரர் ஜீத் ரவல், எதிரணியின் மிதவேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ எலிஸ் வீசிய பந்தை நேராக தூக்கியடித்தார். எதிர்பாராதவிதமாக அந்த பந்து, பந்து வீசிய எலிசின் தலையில் பட்டு தெறித்து ‘லாங்-ஆன்’ திசையில் எல்லைக்கோட்டை தாண்டி விழுந்து சிக்சராக மாறியது.

பந்து தாக்குதலுக்குள்ளான ஆண்ட்ரூ எலிஸ், தலையை கொஞ்ச நேரம் தேய்த்து கொண்டே இருந்தார். பரிசோதனையில், பயப்படும்படி காயம் எதுவும் அடையவில்லை என்று தெரியவந்தது. இதனால் தொடர்ந்து பந்து வீசினார்.

இந்த ஆட்டத்தில் ஜீத் ரவலின் சதத்தின் (149 ஓட்டங்கள், 10 பவுண்டரி, 4 சிக்சர்) உதவியுடன் ஆக்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்கள் குவித்ததுடன், 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியையும் பறித்தது.

பந்து தலையில் பட்டு சிக்சருக்கு பறக்கும் வீடியோ.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும்!!
Next post ஆண்களே…மனம் தளர வேண்டாம்!!