ரஷ்யாவில் உள்ள விவிஇஆர் அணுஉலைக்கு சர்வதேச விருது அறிவிப்பு!!
உலகிலேயே முதல் முறையாக ரஷ்யாவில் உள்ள அணுஉலை ஒன்றுக்கு பாதுகாப்புடன் கட்டமைக்கப்பட்ட அணுஉலை என்ற சர்வதேச விருது கிடைத்திருக்கிறது. 1200 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த அணுஉலைக்குள் முதன் முறையாக ஊடகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து ரஷ்ய அணுமின் நிலைய அதிகாரி கூறியதாவது: தற்போது நாங்கள் இருப்பது அணுமின் நிலையத்தின் மைய கட்டுப்பாட்டு அறை; மையக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தான், அணுமின் நிலையம் முழுவதும் இயக்கப்படுகிறது. டர்பைன்கள், முக்கிய உபகரணங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த 6 பேர் இங்கு பணியில் இருப்பார்கள் என்று தெரிவித்தார்.
இந்த 1200 மெகா வாட் விவிஇஆர் அணுஉலை உலகின் பல்வேறு நாடுகளில் கட்டுமானப்பணியில் இருந்தாலும் உலகத்திலேயே முதல் முறையாக இங்கு தான் அமைக்கப்பட்டது. மேலும் இந்த கட்டுப்பாட்டு அறையில் வேலை பணியாற்றும் பணியாளர்கள் பல்வேறு கட்ட பயிற்சிக்குப் பின்பு தான் இங்கு அழைத்து வரப்பட்டு இதன் செயல்பாட்டுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
Average Rating