பொலிவியா நாட்டில் மழை வெள்ளம் : வெள்ளத்தில் சிக்கிய 50 ஆயிரம் பேர் மீட்பு!!

Read Time:1 Minute, 31 Second

தென் அமெரிக்கா நாடான பொலிவியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தற்போது மழைக்காலம் என்பதால் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. தலைநகரான லவாஸ் நகரின் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து தெருக்கள் வீடுகள் முழுவதும் நீர் சூழ்ந்துள்ளது.

தெற்கு பொலிவியாவில் உள்ள சில நகரங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 50,000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் இதற்கிடையே மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த மழை வெள்ளம் குறித்து பேசிய குவானே நகர மேயர், ‘மப்பிரி ஆற்றில் 15 ஆண்டுகளுக்கு முன் இதே போன்று வெள்ளம் வந்துள்ளது. அதற்குபிறகு இப்போது தான் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அவர்களை விரைவாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிவிட்டோம்’, இவ்வாறு அவர் கூறினார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு : 23 பேர் உயிரிழப்பு!!
Next post அவசரநிலை நீட்டிப்புக்கு அதிருப்தி உள்விவகாரங்களில் தலையிடுவதாக இந்தியாவுக்கு மாலத்தீவு எச்சரிக்கை!!