ஹீரோயினுக்கு கைகுலுக்கி தாத்தா நடிகர் சேட்டை!!

Read Time:2 Minute, 10 Second

கோலிவுட்டில் ஹீரோக்கள் சிலர் வயசானாலும் இளமை முறுக்குடன் உடற்கட்டை பராமரிக்கின்றனர். அதேசமயம் தலையும் தாடியும் நரைத்த மூத்த நடிகர்கள் தாத்தா வேடங்களில் நடிக்கின்றனர். அரசியல், காதல், ஆக்‌ஷன், காமெடி அம்சங்களுடன் உருவாகிறது ‘பதுங்கி பாயணும் தல’. இதன் ஆடியோ வெளியிடப்பட்டது. ஹீரோ மைக்கேல், ஹீரோயின் நைனிகா, வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம் புலி, சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் 70 வயது ராகுல் தாத்தாவுடன் நடிக்கிறார்.

டிரெய்லர் காட்சியில் ஹீரோ மற்றும் நண்பர்களுடன் ராகுல் தாத்தா சேர்ந்து அடிக்கும் லூட்டி கலகலக்க வைத்தது. நிகழ்ச்சிக்கு அனைவரையும் மேடைக்கு அழைத்தனர். இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், டி.ராஜேந்தர் உள்ளிட்டவர்கள் மேடையில் அமர்ந்தனர். கடைசியாக ராகுல் தாத்தாவை மேடைக்கு அழைத்தபோது அவர் மற்றவர்களை காட்டிலும் துள்ளலாக மேடை ஏறிச் சென்றதுடன் அனைவருக்கும் கைகுலுக்கியதுடன் ஹீரோயின் நைனிகா அருகில் கூடுதலாக நின்று அவருடன் கை குலுக்கினார். அவரது சேட்டை அரங்கில் கலகலப்பை ஏற்படுத்தியது. படம் பற்றி இயக்குனர் எஸ்.பி.மோசஸ்முத்துப்பாண்டி கூறும்போது,’எல்லா அம்சங்களும் உள்ள படமாக இது இருக்கும். இதன் படப்பிடிப்பு 53 நாட்கள் திட்டமிடப்பட்டது. ஆனால் 45 நாட்களில் முழுபடப்பிடிப்பும் முடிந்தது. ஆமீனா ஹுசைன் தயாரிப்பு. ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு. வல்லவன் சந்திரசேகர் இசை’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகிழ்ச்சி அளிக்கும் மேக்கப் பிசினஸ்!!
Next post டீன் ஏஜ் செக்ஸ்?!