தேசிய நிர்மாணத்துறை விருது விழா இன்று!!
Read Time:1 Minute, 4 Second
2017 ஆம் ஆண்டிற்கான தேசிய நிர்மாணத்துறை விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (26) நடைபெறவுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பின் கீழ் விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மின்சாரம், இயந்திர சேவை, சிவில் பொறியியலாளர் பசுமை நிர்மாணம், சுற்றாடலுக்குப் பொருத்தமான நவீன தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் கீழ் தேசிய விருது மற்றும் வெற்றிக் கேடயங்கள் வழங்கப்படவுள்ளன.
Average Rating