
ஸ்ரீதேவிக்கு கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி!
ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை புரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்கள் மனதில் பதியவைத்து வருகிறார்.
தேசிய அளவில் தலைசிறந்த மணல் சிற்ப கலைஞராக திகழும் இவர், சர்வதேச அளவில் பல நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் இன்று மணல் சிற்பம் அமைத்துள்ளார்.
சுதர்சன் பட்நாயக்கும், அவரது மாணவர்களும் புரி கடற்கரையில் ஸ்ரீதேவியின் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர். இந்த சிற்பத்துக்கு அப்பகுதி மகக்ள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating