இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 65 வது ஆண்டு விழா

Read Time:1 Minute, 47 Second

1943 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 65 வது ஆண்டு நிறைவு விழா இன்று (04.07.2008) நடைபெற்றது. மஹரகம இளைஞர் மத்திய நிலையத்தின் மண்டபத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜா கொலுரே பொதுச்செயலாளர் டியூ குணசேகரா ஆகியோர் உரைநிகழ்த்தினர். இவ்விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த இந்திய மாக்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சபை உறுப்பினரும், சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளருமான சீதாராம் ஜெய்சூரி வருகை தராததால் அவரது செய்தியுடன் வந்திருந்த மாக்ஸிய கம்யூனிஸ் கட்சியின் பிரதிநிதி தோழர் வரதராஜன் விழாவில் உரையாற்றினார். லங்காசம சமாஜ கட்சியை சேர்ந்த அமைச்சர் திஸ்ஸவிதாரண, புதிய இடதுசாரி மு;னனணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார பத்மநாபா ஈபிஆர்எல்எவ் பொதுச்செயலாளர் தி.சிறீதரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் ஐக்கிய தேசிய முன்னணி தலைவியும் அமைச்சருமான பேரியல் அஷ்ரப், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானர் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் எம்.பி.யை தலீபான்கள் சுட்டுக் கொன்றனர்; அமெரிக்காவின் எதிர் தாக்குதலில் தவறுதலாக 22 அப்பாவிகள் சாவு
Next post இலங்கையில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டை புறக்கணிப்பதற்கு ஊடக அமைப்புகள் முயற்சி