வயல்வெளியில் வந்தவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்!!

Read Time:1 Minute, 13 Second

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் நேற்று (02) வெள்ளிக்கிழமை இனந்தெரியாத நபர்களினால் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 39 ஆம் கிராமமத்தில் வயல்வெளி ஊடாக வந்து கொண்டிருந்தவரை வழி மறித்த சிலர் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

படுகாயமடைந்த 39 ஆம் கிராமத்தினை சேர்ந்த 49 வயதான கமலேஸ்வரன் என்பவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவுவது நல்லது!!
Next post கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும்!!