சிரம்பியடியில் சடலம் மீட்பு
Read Time:59 Second
புத்தளம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட சிரம்பியடி பிரதேசத்தில் இனந்தெரியாத சடலமொன்றினை புத்தளம் பொலீசார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர். பிரதேச மக்கள் பொலீசாருக்கு வழங்கிய தகவலினை அடுத்தே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சடலம் அடையாளம் காண முடியாதவாறு உருக்குலைந்து உள்ளதாகவும் இரு பெரும்பாலும் ஒரு பெண்ணின் சடலமாக இருக்கலாமெனவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். மிருகங்கள் கடித்துக் குதறியதால் எலும்பாக காணப்பட்ட இச்சடலத்தை புத்தளம் வைத்தியசாலையின் சவச்சாலையில் பொலீசார் ஒப்படைத்தனர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
Average Rating