புத்தளம் தேடுதலில் 33பேர் கைதாகி விடுதலை

Read Time:1 Minute, 31 Second

புத்தளம் நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பொலீசார் மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு பெண் உட்பட 33பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பெண் முஸ்லிம் ஆவார். ஏனைய 37 பேரும் தமிழர்களாவர். இவர்கள் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த தவறியதாலும், பொலீஸ் பதிவுகளை மேற்கொள்ளாததாலும் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். கைதான பெண் நேற்று முன்தினமிரவு விடுவிக்கப்பட்டுள்ளார். ஏனையோர் நேற்றுக்காலை விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கைகளில் புத்தளம் பொலீஸ் நிலையம் மற்றும் நிக்கவரெட்டிய பொலீஸ் பிரிவைச் சேர்ந்த 50ற்கும் மேற்பட்ட பொலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நடவடிக்கை நேற்றும் தொடர்ந்து இடம்பெற்றதாக புத்தளம் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காபூல் இந்தியத் தூதரகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல்; 40 பேர் பலி
Next post பெர்லின் அருங்காட்சியகத்தில் ஹிட்லரின் மெழுகு சிலையில் தலை உடைப்பு: ஆசாமி கைது