2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
Read Time:54 Second
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் 2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இன்று (06) காலை 11.45 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு கிலோவாக பொதி செய்யப்பட்ட 2 கேரள கஞ்சா பொதிகளை சந்தேகநபர் கிளிநொச்சிக்கு எடுத்து செல்ல முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல், மாவத்தகமவை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating