இனி தாடி வளர்க்க முடியாது – தாடிக்கு தடை!!

Read Time:2 Minute, 21 Second

பாகிஸ்தானில் இளைஞர்கள் ஸ்டைல் ஆக பல பே‌ஷன்களில் தாடி வளர்க்கின்றனர். அதற்காக அங்குள்ள சலூன்களுக்கு சென்று சீரமைத்து கொள்கின்றனர்.

ஆனால் பக்துன்கவா மாகாணத்தில் தாடியை பே‌ஷன் ஆக வெட்ட முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பெஷாவரில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்க மாநாடு நடந்தது. அதில் இத்தகைய தீர்மானம் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இருந்தது. அப்போது பே‌ஷன் ஆக தாடி வளர்க்கவும் அதை முடிதிருத்தும் தொழிலாளர்கள் வெட்டி சீரமைக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தலிபான்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்த நிலையிலும் தற்போது அங்கு இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு மீண்டும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதை முடிதிருத்தும் தொழிலாளர் சங்க தலைவர் ‌ஷரீப் காலு மறுத்துள்ளார். பயங்கரவாதிகள் மிரட்டலால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. பலவித பே‌ஷன்களில் தாடி வளர்ப்பது இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்பதால் தான் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. என்றார்.

பக்துன் கவா மாகாணத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டனர். தங்கள் சலூன்களில் பே‌ஷன் ஆக தாடி வெட்ட மாட்டோம் என சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (அவ்வப்போது கிளாமர்)இயந்திரத்தின் உதவியுடன் ஆர்கஸம்!
Next post விபத்தில் யுவதி ஒருவர் பலி!!