நிர்வாணப் பூஜை: சாமியாருக்கு பெண்கள் அடி உதை!

Read Time:2 Minute, 43 Second

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் பெண்ணை நிர்வாணப் பூஜை உட்படுத்திய கேரள சாமியாரை அப்பகுதி பெண்கள் ஒன்று கூடி சரமாரியாக அடித்து உதைத்தனர். வீரப்பன் சத்திரத்தில் ஹோட்டல் நடத்தி வந்தவர் கோபாலன் (48). சில காலமாக தொழில் கடும் நஷ்டம் ஏற்பட்டதால் ஹோட்டலை மூடிவிட்டார். மாற்று தொழில் செய்ய ஈரோட்டு ரெங்கம்பாளையத்தில் உள்ள கேரளாவைச் சேர்ந்த கிரி அய்யர் என்ற ஜோதிடரை சந்திக்க போபாலனும், அவரது மனைவி தேவியும் சென்றனர். அவர்களது ஜாதகத்தை தீவிரமாக ஆராய்ந்த ஜோதிடர், தேவியின் ஜாதகத்தில் மட்டும் கடும் தோஷம் உள்ளதால் அதை நீக்க பரிகார பூசை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு கோபாலனும் அவரது மனைவி தேவியும் சம்மதம் தெரிவித்து உறவினர்களுடன் நேற்று மதியம் ஜோதிடர் அலுவலகம் சென்றனர். கோபாலனையும், அவரது உறவினர்களையும் ஜோதிட அறைக்கு வெளியே அனுப்பி விட்டு, தேவியை தனிமையில் வைத்து அவரது ஆடைகளைக் களையுமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தார் தேவி. பின்னர் பூஜை என்ற பெயரில் சில்மிஷம் செய்ய ஆரம்பித்துள்ளார். உச்சகட்டமாக கற்பழிப்புக்கும் முயன்றுள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த தேவி தன்னை காப்பற்றி கொள்ள ஜோதிடரை நோக்கி சேர், நாற்காலிகளை கொண்டு தாக்கி தப்பி வெளியே ஓடி வந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவரும், உறவினர்களும் ஜோதிடரின் செக்ஸ் லீலைகளை கேட்டு ஆவேசம் அடைந்து அவரை நையப்புடைத்தனர். தேவியின் உறவுக்காரப் பெண்கள் ஜோதிடரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். கம்பியாலும் தாக்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் பெண்களின் பிடி பிளஸ் அடியில் சிக்கிய ஜோதிடரை மீட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர் அவரை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்முனையில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் பலி
Next post தொழிற்சங்கங்களின் அடையாள வேலைநிறுத்தம்..