(சினிமா செய்தி)சன்னிலியோன் பேனர்களை வயலில் வைத்த விவசாயி!!

Read Time:1 Minute, 45 Second

வயல்வெளிகளில் அறுவடை காலங்களில் பறவைகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க பொம்மைகள், கண் திருஷ்டி பொம்மைகள் வைப்பார்கள்.

ஆனால் விவசாயி ஒருவர் தனது வயலில் உள்ள பயிர்களை கண்திருஷ்டியில் இருந்து பாதுகாக்க நடிகை சன்னி லியோன் கவர்ச்சி பேனர்களை வைத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பன்டதின்டாபலே கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சென்னாரெட்டி.

இவர் தனது 10 ஏக்கர் வயலில் நெற்பயிர்களை பயிரிட்டிருந்தார். தற்போது அது நன்றாக வளர்ந்து இருக்கிறது. இதனால் கிராம மக்களின் கண் திருஷ்டியில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க சன்னிலியோன் கவர்ச்சி படங்களை வயலை சுற்றி வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது 10 ஏக்கர் வயலில் நல்ல விளைச்சல் பெற்று இருக்கிறேன். இதனால் கிராம மக்கள் கவனம் வயல் மீது விழ விரும்பவில்லை.

பலர் எனது வயலை பார்த்து ஆச்சரியப்பட்டனர். இதனால் அவர்களது கவனத்தை திசை திருப்ப நடிகை சன்னிலியோன் பேனர்களை வைத்தேன்.

இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தற்போது யாரும் எனது வயலை பார்ப்பதில்லை.

சன்னி லியோன் பேனரில் ‘ஏய் என்னை யார் பார்க்கிறது’ என்ற வாசகம் எழுதப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை தணிக்க தென்கொரிய தூதுக்குழுவுடன் வடகொரிய அதிபர் பேச்சு!!
Next post (மருத்துவம்)எடையைக் குறைக்கும் லவங்கப்பட்டை!!