சிங்கப்பூர் பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி : பேஸ்புக்கில் ராகுல் பதிவு!!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் பல்வேறு மூத்த தலைவர்களை நேற்று சந்தித்து பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிங்கப்பூர், மலேசிய நாட்டிற்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை நேற்று சந்தித்து பேசினார். துணை பிரதமர் தர்மான் சண்முக ரத்தினத்தையும் அவர் சந்தித்தார்.
இது தொடர்பாக ராகுல் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என கூறியுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு மலேசியா செல்லும் ராகுல், அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து பேசுகிறார்.
ராகுல் மழுப்பல் பதில்
சிங்கப்பூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் `மீண்டும் பிறக்கிறது ஆசியா’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் பி.கே.பாசு என்பவர் இந்திய பொருளாதாரம் தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில்,` உங்கள் குடும்பத்தினர் இந்தியாவை ஆட்சி செய்தபோது இந்தியாவின் தனிநபர் வருவாய் உலக சராசரியை விட குறைவாக இருந்தது.
காங்கிரஸ் பதவியை இழந்த பிறகே அங்கு தனி நபர் வருவாய் சீராக வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு உங்கள் பதில் என்ன?’ என கேள்வி கேட்டார். இந்த கேள்வி ராகுலுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல், `கடந்த 2004 முதல் தற்போது வரை இந்திய அரசியலில் நான் எந்த முக்கிய பங்கும் வகிக்கவில்லை’ என மழுப்பினார்.
Average Rating