நிதி மோசடி புகாரை தொடர்ந்து மொரீஷியஸ் அதிபர் அமினாஹ் குரிப் பாஹிம் பதவி விலகல் !!

Read Time:1 Minute, 58 Second

நிதி மோசடி புகாரை தொடர்ந்து மொரீஷியஸ் அதிபர் அமினாஹ் குரிப் பாஹிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மொரீஷியஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக 2015ம்ஆண்டு அமினாஹ் குரிப் பாஹிம் பதவி ஏற்றார்.இவருக்கு அரசு சார அமைப்பு சார்பில் வழங்கப்பட்ட வங்கி அட்டையை முறைகேடாக பயன்படுத்தி நிதி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. அதாவது, அந்த அரசு சார அமைப்பின் சம்பளம் வாங்காத இயக்குநர் என்ற பொறுப்பில் அமினாஹ் இருந்தார்.

அவருக்கு செலவுக்காக பயன்படுத்திக் கொள்ளும்படி வழங்கப்பட்ட கிரெடிட் கார்டு மூலம் துணி, தங்கம் மற்றும் வைர நகை மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கான பொருட்களை வாங்கி இருந்தது அந்த கிரெடிட் கார்டு அறிக்கை மூலம் அம்பலமானது. அந்த புகார் வெளியானவுடன் அந்த பணத்தை திருப்பி கொடுக்கப்போவதாக அதிபர் அறிவித்தார். ஆனாலும் அதை அந்நாட்டு அரசு ஏற்கவில்லை. இதையடுத்து அவர் அதிபர் ராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக பிரதமர் பிரவீந்த் ஜக்நாத் கூறியது, அதிபர் பாஹிம் மீதான மோசடி ஊர்ஜிதமாகியுள்ளது. நாட்டு நலன் கருதியே அவர் ராஜினாமா செய்துள்ளார் என்றார். வரும் 15-ம் தேதி மொரிஷீயஸ் தனது 50-வது குடியரசு தின விழாவை கொண்டாட உள்ள நிலையில் அதிபர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (வீடியோ)கோமாளி கிங்ஸ் இயக்குனர் கிங் ரட்ணத்துடன் நேர்காணல்!!
Next post இங்கிலாந்தில் உள்ள கடல்வாழ் உயிரியல் பூங்காவில் திடீரென 35% உயிரினங்கள் இறப்பு: இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி!!