ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்? ரஜினிகாந்திடம், இமயமலை ரிஷி சொன்ன ரகசியம்

Read Time:2 Minute, 59 Second

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி ரஜினிகாந்திடம், இமயமலை ரிஷி ஒரு ரகசியம் சொன்னார். அந்த ரகசியத்தின்படி, கடந்த 14 வருடங்களாக வாழ்ந்து வருவதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினிகாந்த் நடிக்கும் `குசேலன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசியவர்கள் அனைவரும் ரஜினிகாந்தின் இளமையான தோற்றம் பற்றி குறிப்பிட்டார்கள். `சந்திரமுகி’ படத்தில் ரஜினிகாந்த் மிக இளமையாக தெரிந்தார். அந்த படத்தை அடுத்து வெளிவந்த `சிவாஜி’ படத்தில், அவருடைய தோற்றம் இன்னும் இளமையாக இருந்தது. அவர் நடித்து முடித்துள்ள `குசேலன்’ படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், ரஜினிகாந்த், `சிவாஜி’ படத்தை விட இளமையாக காணப்பட்டார். 1980-ல் பார்த்த ரஜினிகாந்த், `குசேலன்’ பட புகைப்படங்களில் தெரிந்தார். தனது இளமை ரகசியம் பற்றி ரஜினிகாந்த் பேசும்போது, “நான் பால், தயிர், நெய், அரிசி சாதம் ஆகியவைகளை சாப்பிடுவதில்லை. வெள்ளை நிற உணவு பொருட்களை தவிர்க்கிறேன்” என்று கூறினார். ரஜினிகாந்தின் இந்த உணவு கட்டுப்பாடு பற்றி 40 வயதை தாண்டியவர்கள் அனைவரும் சிந்திக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். குறிப்பாக, அவருடைய ரசிகர்கள் வெள்ளை நிற உணவுகளான பால், தயிர், நெய், அரிசி சாதம் ஆகியவைகளை தவிர்க்க தொடங்கி இருக்கிறார்கள். இதுபற்றி நிருபரிடம் ரஜினிகாந்த் பேசும்போது கூறியதாவது:- “நான் 14 வருடங்களுக்கு முன்பு இமயமலை சென்றபோது, ஒரு ரிஷியை சந்தித்தேன். அவரிடம், “ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அந்த ரிஷி, “பால், தயிர், நெய், அரிசி சாதம், தேங்காய் போன்ற வெள்ளை உணவுகளை சாப்பிடாதே” என்றார். அதை அப்படியே ஏற்றுக்கொண்டேன். அந்த ரிஷி சொன்னபடிதான் சாப்பிடுகிறேன். உடம்பு ஆரோக்கியமாக இருக்கிறது.” இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டனில் தனது மூன்று மாதங்களேயான பெண் குழந்தையை துன்புறுத்தி கண்பார்வையை இழக்கச் செய்த இலங்கைத் தந்தை தற்கொலை
Next post தினந்தோறும் கிளாமர் படங்கள்..