மீன் எண்ணைய் மாத்திரையை தினமும் சாப்பிடுவதால்(மருத்துவம்)!!!

Read Time:2 Minute, 28 Second

இன்று மருந்தகங்களில் எளிதாக கிடைக்கின்றது மீன் எண்ணெய் மாத்திரைகள். மீன் எண்ணெய் மாத்திரையை பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் எடுத்துக்கொள்கின்றனர். என்ன பலன் கிடைக்கிறது எனத் தெரியாவிட்டாலும், ‘உடலுக்கு நல்லது’ என்ற பொதுவான அபிப்பிராயத்தில் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்பவர்கள்தான் இன்று அதிகம்.

மீன் எண்ணெய் அதன் பலமான நலன்களுக்காக பாராட்டப்பட்டாலும் இன்றைய புதிய ஆய்வின்படி, மீன் எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெயை நீண்டகாலம் தொடர்ந்து நுகர்விற்கு எடுத்துவந்தால், வாழ்நாள்காலம் அதிகரித்துச் செல்கையில் கல்லீரலில் கொழுப்பு படிந்து கல்லீரல் கொழுப்பு நோய் ஆபத்தை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வுகளின் மூலம் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாய்விற்காக, எலிகளை கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் மீன் எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய்யை உட்கொண்ட எலிகளின் கல்லீரலில் மாற்றத்தை அவதானிக்க முடிந்தது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவில் உள்ள கொழுப்பானது, கல்லீரலை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளார்கள். உணவு மற்றும் கல்லீரல் கொழுப்புக்கும் இடையேயான தொடர்பை கட்டியெழுப்ப, பேராசிரியர் க்விலஸ் மற்றும் அவருடைய சக உழியர்களிடம் இருந்தே இந்தப் புதிய ஆய்வரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாம் எடுக்கும் எண்ணெய்களின் வகை நிலைமையைப் பொறுத்தவரையில் நமது வாழ்நாள்கால வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு (அவ்வப்போது கிளாமர்)!!
Next post முதல் ரயில்வே கூலி பெண்( மகளிர் பக்கம்)!!