காதலனை காப்பாற்றுவதற்காக தந்தையை கொலை செய்த மகள்: தாய் கண்ணீர் புகார் !

Read Time:2 Minute, 6 Second

இந்தியாவில் காதலனை காப்பாற்றுவதற்காக பெற்ற தந்தையை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 4 மணியளவில் தனது மகளின் அறையிலிருந்து தொடர்ந்து சத்தம் வந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக மகளின் அறையை திறந்து பார்த்த போது, அவரது மகள், தன்னுடைய காதலனுடன் ஒன்றாக இருந்திருக்கிறார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மகளின் காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இது முற்ற, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது.

அப்போது தனது காதலனை காப்பாற்றுவதற்காக மூன்றாவது மாடியில் இருந்து மகளும், அவரின் காதலனும் இணைந்து அவரை கீழே தள்ளிவிட்டதால், பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

ஏதோ வெளியில் சத்தம் கேட்கிறதே என்று சாந்தி வெளியில் வந்து பார்த்த போது, கணவன் இறந்து கிடப்பதை பார்த்து கதறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சாந்தி, தனது மகள் மற்றும் அவரின் காதலன் மீது காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விஷ்ணுவின் மகளை கைது செய்துள்ளனர். ஆனால் அவரது காதலன் தப்பிஓடிவிட்டார். பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினியை கேள்வியால் அசரவிட்ட வீர பெண்(வீடியோ) !!
Next post விமானங்கள் எப்படி இயங்குகிறது தெரியுமா?-டாப் 10 தமிழ்(வீடியோ)!!