கருணாஅம்மான், பிள்ளையான் கொழும்பில் முக்கிய சந்திப்பு!- ரிஎம்விபியின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள்!!

Read Time:4 Minute, 12 Second

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான கருணாஅம்மான் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதித் தலைவருமான பிள்ளையான் ஆகியோர் கொழும்பில் நேற்று நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நாரகென்பிட்டிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் காரியாலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக அதன் ஊடகப் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். கட்சியின் அரசியல் அதியுயர் பீடக்கூட்டம் நேற்றுக்காலை நடைபெற்ற போதே கருணாஅம்மானும், கிழக்கு முதல்வரும் சந்தித்துள்ளனர். காலை 10.30மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நடைபெற்ற அரசியல்பீட கூட்டத்தில் ஏனைய பதினொரு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள், வடமத்திய மாகாணசபைத் தேர்தல் செயற்பாடுகள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் பங்களிப்பு செய்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து நேற்றைய சந்திப்பில் ஆராயப்பட்டதாக பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். நேற்றுக் கூடிய ரிஎம்விபி கட்சியின் மத்தியகுழுவினர் கட்சியின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவராக கருணாஅம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்ந்தும் செயல்படுவார் என அறிவித்துள்ளனர். தொடர்ந்து கருணாஅம்மான் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கட்சி மட்டத்தில் உடன் நடைமுறைக்கு வருமுகமாக சில மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டதுடன் அம்மாற்றங்கள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி பிரதிதலைவராக பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் செயலாளராக இனியபாரதி எனப்படும் குமாரசாமி புஸ்பகுமார் பிரதி செயலாளராக சு10ட்டி நிதிப்பொறுப்பாளராக ஜெயம் பதில் நிதிப்பொறுப்பாளராக உருத்திரா மாஸ்ரர் தேசிய அமைப்பாளராக பிரதீப் மாஸ்ரர் பதில் தேசிய அமைப்பாளராக சின்னத்தம்பி திருமலை மாவட்ட அமைப்பாளராக மார்க்கன் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக மங்களன் மாஸ்ரர் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக ஜீவேந்திரன் செயற்குழு உறுப்பினர்களாக சீலன் பத்மினி எனும் திருமதி.சிவகீதன் பிரபாகரன் ரீயசீலன் ஆகியோருடன் ஊடக பேச்சாளராக அசாத் மௌலானாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மேற்படி ரிஎம்விபியின் செயற்குழுவில் வெளிநாடுகளில் உள்ள ரிஎம்விபி ஆதரவாளர்களையும் இணைத்துக் கொள்ள எடுக்கப்பட்ட முயற்சி நிராகரிக்கப் பட்டுள்ளதுடன் பிரித்தானியாவிலிருந்து அண்மையில் நாடு திரும்பிய கருணாஅம்மான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Thanks For… WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினந்தோறும் கிளாமர் படங்கள்..
Next post ஹாலிவுட் தேவதை ஏஞ்செலினா ஜூலிக்கு ‘டுவின்ஸ்’