கப்பலில் பயணம் செய்ய வேண்டாம்: பொதுமக்களுக்கு விடுதலைப்புலிகள் எச்சரிக்கை

Read Time:1 Minute, 20 Second

ltte-kodi.gifஇலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நீடித்து வருகிறது. சம்பூரை பிடித்துக் கொண்ட ராணுவம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மேலும் சில பகுதிகளை பிடிக்க முயற்சி செய்து வருகிறது. இதேவேளை ராணுவத்தின் படகுகள் மற்றும் கப்பல்கள் மீது விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்துவதை தடுக்க பொதுமக்களை ராணுவம் தங்கள் கப்பலில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள் என புலிகள் தெரிவிக்கின்றார்கள்.

இதுபற்றி பொதுமக்களுக்கு விடுதலைப்புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்களை மனித கேடயமாக பயன்படுத்தி ஏற்றிச்செல்லும் ராணுவ கப்பலில் யாரும் பயணம் செய்யவேண்டாம். இப்போது உள்ள சூழ்நிலையில் கடல்வழி போக்குவரத்தை தவிர்ப்பது நல்லது என்று விடுதலைப்புலிகளின் அரசியல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முஸ்லிம்களுக்கு எதிராக போப் பேச்சு: பாலஸ்தீனத்தில் 2 தேவாலயம் மீது குண்டு வீச்சு
Next post வீரப்பன் கதையை படமாக்கினால் வழக்கு தொடருவேன் மனைவி முத்துலட்சுமி ஆவேசம்