உலகின் மகிழ்ச்சியான நாடு இதுவா(உலக செய்தி)?

Read Time:2 Minute, 4 Second

ஐ.நா. சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் பிணையம், 201 ஆம் ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கையை (வேர்ல்ட் ஹேப்பினஸ் ரிப்போர்ட்) வெளியிட்டு உள்ளது.

வருமானம், சுகாதாரம், ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம், அகதிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கையில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இதில் முதல் இடத்தில் பின்லாந்து இருக்கிறது.

பின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, சுவீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள்தான், மகிழ்ச்சியான முதல் 10 நாடுகளின் பட்டியலை ஆக்கிரமித்து உள்ளன.

மக்களின் கனவு பிரதேசமாக திகழ்கிற அமெரிக்கா, மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 இடங்கள் பின்னுக்குப் போய் 18 ஆவது இடத்தில் உள்ளது.

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது, மத்திய ஆப்பிரிக்க நாடான புரூண்டி.

உள்நாட்டுப்போரால் சிரியாதான் மிகவும் மோசமான நாடு என எல்லோரும் நினைத்து இருக்கும் வேளையில் அந்த நாட்டை விட மோசமான நாடுகள் என்று கூறத்தக்கவிதத்தில் ருவாண்டா, ஏமன், தான்சானியா, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கௌதமியின் மகள் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு(சினிமா செய்தி ) !!
Next post படர்தாமரை பரவாமல் தடுப்போம்(மருத்துவம்)!