லண்டன் நீதிமன்றத்தில் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் மீண்டும் விசாரணை(உலக செய்தி)!!

Read Time:2 Minute, 36 Second

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றம் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார். அவருக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிந்து, மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, சிபிஐ தரப்பில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பான இவ்வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி தொடங்கியது. அப்போது மத்திய அரசு தரப்பில் 150 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து, மல்லையா தரப்பு வக்கீல்கள் சந்தேகத்தை கிளப்பினர்.

மேலும், இந்திய கிரிமினல் சட்டப்பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை கொண்டு இந்தியா – இங்கிலாந்து இடையிலான நாடு கடத்தும் நடவடிக்கையை எடுக்க முடியாது எனவும் அவர்கள் வாதாடினர். இதையடுத்து, மல்லையாவுக்கு ஏப்ரல் 2ம் தேதி வரை ஜாமீன் அளித்து உத்தரவிட்ட வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற தலைமை மாஜிஸ்திரேட் எம்மா அர்பத்நாட், வழக்கின் மறுவிசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில், மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் மீண்டும் விசாரணையை நேற்று தொடங்கியது. ஏப்ரல் 2ம் தேதி வரை ஜாமீன் பெற்றுள்ளதால் மல்லையா நேற்றைய விசாரணையில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செம்பருத்தி.. செம்பருத்தி பூவ போல பெண்ணொருத்தி(மகளிர் பக்கம்)!!
Next post நடிகர் தனுஷை சொந்தம் கொண்டாடி மேலூர் தம்பதி(வீடியோ)!!