அரசு மரியாதை கொடுக்கும் அளவிற்கு ஸ்ரீதேவி என்ன செய்தார்(சினிமா செய்தி)?

Read Time:1 Minute, 41 Second

மராட்டிய மாநிலம் சிவாஜி பூங்கா அருகே நேற்று ஒரு பொதுகூட்டம் நடைபெற்றது. அதில் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் மூவர்ணக் கொடி போர்த்தி அரசு மரியாதை கொடுக்கும் அளவிற்கு அவர் நாட்டிற்கு என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், மக்களை திசைத்திருப்பும் வேளையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் வங்கி மோசடி விவகாரத்தில் நீரவ் மோடி குறித்து சர்ச்சை கிளம்பியது. இதை மக்கள் அதிகம் பேசிக் கொண்டிருந்த வேளையில், ஸ்ரீதேவி மரணம் குறித்த அடுத்த சர்ச்சை உருவானது. இதனால் நிரவ் மோடி விவகாரம் மறக்கடிக்கப்பட்டது. ஸ்ரீதேவி பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பதால் மூவர்ணக் கொடி, அவரது உடலில் போர்த்தியதாக அரசு விளக்கம் அளித்துள்ளது, என பேசினார்

மேலும் ஸ்ரீதேவி மிகப்பெரிய நடிகையாக இருக்கலாம். அவர் நாட்டிற்காக என்ன செய்தார் என்று இந்த மரியாதை அளிக்கப்பட்டது என்று ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post FB யில் இருந்து நபர்களின் தகவல்கள் திருட்டு(உலக செய்தி ) !!
Next post மும்பாய்: செங்கடலை போர்த்திய விவசாயிகள்(கட்டுரை)!!