இந்த நிகழ்ச்சிக்கு ஆர்யாவுக்கு இத்தனை கோடி சம்பளமா? (வீடியோ)

Read Time:1 Minute, 31 Second

ஆர்யா பெண் தேடும் வேலைகளில் இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். பெண் தேடுவது என்றால் படத்திற்காக அல்ல, வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க இருக்கிறார்.

அதற்காக ஒரு புதிய தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியே நடக்கிறது. இதில் ஆர்யாவுக்காக 16 பெண்கள் போட்டி போட களமிறங்கினர். சமீபத்திய நிகழ்ச்சி முடியில் 10 பெண்கள் மட்டுமே உள்ளனர், மற்றவர்கள் வெளியேறிவிட்டனர்.

இனி இருப்பவர்களில் யாரை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது என்ன தகவல் என்றால் பொதுவாக ஒரு படத்திற்கு ஆர்யா இரண்டு மாதம் கால்ஷீட் கொடுப்பாராம், அதோடு 2ல் இருந்து 3 கோடி வரை சம்பளம் வாங்குவாராம்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக மட்டும் ஆர்யா ரூ. 8ல் இருந்து 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது சரியாக தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினி பச்சைத் தமிழரா ? சீமான் ஆவேசம் (வீடியோ)!!
Next post வைர வியாபாரி மகளை காதலிக்கும் அம்பானி மகன் !!