இந்தோனேஷியாவில் 42 பெண்களை கொன்று புதைத்தவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவை சேர்ந்தவன் அகமது சுரத்ஜி. போலி மந்திரவாதியான இவன் எந்த நோயையும் தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறிக்கொண்டு திரிந்தான். நோயை குணப்படுத்த தன்னிடம் வரும் பெண்களின் உடைமைகளை கொள்ளையடிப்பதோடு, அவர்களை கொன்றும் வந்தான். கடந்த 10 ஆண்டுகளில் 42 பெண்களை கொன்று தன் வீட்டுக்கு அருகே புதைத்தான். பெண்களை கொல்வதை 1986-ம் ஆண்டு தொடங்கினான். கனவில் என் மறைந்த தந்தை தோன்றி, 70 பெண்களை கொன்று அவர்களின் எச்சிலை குடித்தால் அதிக சக்தி கிடைக்கும் என்று கூறியதாகவும், இதனால் தான் பெண்களை கொலை செய்தேன் என்றும் அவன் போலீசாரிடம் கூறினான். 11 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களை தான் இவன் கொலை செய்தான். போலீசார் இவனை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 1997-ம் ஆண்டு கோர்ட்டு அவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. மன்னிப்பு கேட்டு ஜனாதிபதிக்கு கருணை மனு போட்டான். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சிறை ஊழியர்கள் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றினார்கள்.
Average Rating