மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் பலி!!

Read Time:1 Minute, 28 Second

மாதம்பே – குளியாப்பிட்டிய பிரதான வீதியில் உடுபத்தாவ பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (25) நள்ளிரவு 1 மணியளவில் இந்ந விபத்து ஏற்றபட்டுள்ளது.

மாதம்பே நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அதே பக்கத்தில் சென்ற மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முயற்சித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஒரு மோட்டார் சைக்கிளின் கண்ணாடி மற்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதும், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதிக்கு அருகில் இந்த மரத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 19 வயதுடைய புத்தி சந்திமால், டிலான் சன்சில மற்றும் 18 வயதுடைய இசிரி சந்திரசிரி ஆகிய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞர்களின் சடலம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தும்மலசூரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராணுவ வாகனம் மோதி இளைஞர் பலி!!
Next post அஜீரண கோளாறை போக்கும் மாங்காய்(மருத்துவம்)!!