வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி!!

Read Time:1 Minute, 51 Second

வயிற்றுக் கொழுப்பை குறைக்க அவதிப்படும் பெண்கள் திரிகோணாசனம் உடற்பயிற்சியை மேற்கொண்டாலே போதுமானது.

திரிகோணாசனம் செய்வதனால் வயிற்றுப் பகுதி நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படும், ரத்த ஓட்டம் சீராகும்.

முதுகுத் தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி ஆகிய பகுதிகளின் வளையும் தன்மை அதிகரிக்கிறது, வயிற்றுக் கொழுப்பு கரைக்கப்பட்டு, இடுப்புப் பகுதி மெலியும், சிறுநீரகம் வலுவடையும்.

செய்முறை

tamilcnn.lk

உள்ளங்கைகள் இரு பக்கவாட்டிலும், தொடையை ஒட்டி இருக்கும்படி நேராக நிற்கவும். கால்களை அகட்டிக்கொள்ளவும், காலை அசைக்காமல் இடுப்பை மட்டும் இடது புறம் திருப்பவும். • இடுப்பை வளைத்து, வலது உள்ளங்கையை இடது காலுக்குப் பக்கத்தில் தரையில் ஊன்றவும். இடது உள்ளங்கையின் மேலே உயர்த்திய நிலையில், மூச்சை வெளியே விடவும். மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடியே மேலெழும்பி இதையே வலதுபுறம் செய்யவும். பின் கைகளைக் கீழே தொங்கவிடவும், வலது காலைத் தூக்கி இடது காலின் அருகில் ஊன்றவும்.

இதே போல் மறுபுறம் செய்யவேண்டும்.

குறிப்பு – தீவிரமான இதய நோய் உள்ளவர்கள், இடுப்புக் கீல் வாயுவினால் அவதிப்படுபவர்கள், இதய நோயாளிகள் இந்த ஆசனத்தைச் தவிர்ப்பது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினியை திட்டதே சீமான் தொண்டன் பரபரப்பு பேட்டி நாம் தமிழர்கள்(வீடியோ)!!
Next post தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்(அவ்வப்போது கிளாமர்)!!