இத 2 முறை செஞ்சாலே வெள்ளையாயிடலாம்(மகளிர் பக்கம்)…!!

Read Time:5 Minute, 44 Second

இப்படி மாதத்திற்கு ஒருமுறை செய்து வந்தாலே, முகம் பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் காணப்படும்.
உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்* சில துண்டுகள் உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
* பின் அத்துடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

* இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், உங்கள் முகப் பொலிவு அதிகரிக்கும்.

கேரட் ஃபேஸ் பேக்* 2 டீஸ்பூன் கேரட் ஜூஸ் உடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்தாலே முகம் பிரகாசமாக காணப்படும்.

கத்திரிக்காய் ஃபேஸ் பேக்* கத்திரிக்காயை துண்டுகளாக்கி அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* பின் அந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு கிளின்சர் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

* இந்த பேக்கை மாதத்திற்கு 2 முறை செய்யுங்கள். இதனால் உங்கள் முகம் பளிச்சென்று மாறுவதைக் காணலாம்.

பீட்ரூட் ஃபேஸ் பேக்* பீட்ரூட்டை துண்டுகளாக்கி, நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

* இந்த ஃபேஸ் பேக்கை மாதத்திற்கு 3 முறை செய்து வந்தால், முகம் பிரகாசமாகவும், வெள்ளையாகவும் மாறும்.

பச்சை பட்டாணி ஃபேஸ் பேக்* 6-7 பச்சை பட்டாணியை அரைத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

* பின்பு மைல்டு கிளின்சர் பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரின் உதவியால் கழுவவும்.

* இப்படி மாதத்திற்கு ஒருமுறை செய்து வந்தாலே, முகம் பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் காணப்படும்.

முட்டைக்கோஸ் ஃபேஸ் பேக்* 2-3 முட்டைக்கோஸ் இலையை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீயை 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு இந்த கலவையை முகம் முழுவதும் தடவ வேண்டும்.

* 10-15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி மாதத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், முகம் எப்போதும் பிரகாசமாக காட்சியளிக்கும்.

செலரி ஃபேஸ் பேக்* ஒரு துண்டு செலரி கீரையை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி மாதத்திற்கு ஒருமுறை செய்வதால், முகம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும், அழகாகவும் இருக்கும்.

தக்காளி மாஸ்க்* தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை கழுத்து மற்றும் முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின் 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி தினமும் செய்து வந்தாலே, முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதுமையில் இளமை சாத்தியமா?(மருத்துவம்)
Next post பயமா எனக்கா பட்டய கிளப்பிய ரஜினி!!( வீடியோ )