ராமசாமியை திருமணம் செய்த சசிகலா!!

Read Time:2 Minute, 6 Second

மாநிலங்களவை அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவும், அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகனும் டெல்லி துவாரகாவில் உள்ள குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதி பி.ஆர்.கேடியா முன்னிலையான அமர்வு முன்பாக பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இவர்கள் இருவருக்கும் இடையிலான விவாகரத்துக்கு அனுமதி வழங்குவதாகவும் இருவரும் அவரவர்களின் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கிடையே சசிகலா புஷ்பாவுக்கும் ராமசாமி என்பவருக்கும் டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் மார்ச் 26 ஆம் திகதி மறுமணம் நடைபெறுவதாக பரபரப்பு தகவல் வெளியானது. இது தொடர்பான திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ராமசாமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்ய சசிகலா புஷ்பா ஏற்பாடு செய்து வந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம், ராமசாமி வேறு பெண்ணை திருமணம் செய்ய தடை விதித்தது.

இந்நிலையில் சசிகலா புஷ்பாவுக்கும், ராமசாமிக்கும் டெல்லியில் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!!
Next post பழம்பெரும் நடிகை தீவிர சிகிச்சை பிரிவில்… !!