சுவிட்சர்லாந்தில் ராமாயண ஓவியக் கண்காட்சி
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ராமாயண ஓவியக் கண்காட்சி அந்நாட்டு மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஜூரிச்சில் உள்ள ரிட்பெர்க் அருங்காட்சியகத்தில் இந்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற கண்காட்சி இங்கு நடைபெறுவது இதுவே முதல்முறை. பழங்கால கலைநுணுக்கங்களுடன் அமையப்பெற்றுள்ள இந்த ஓவியக் கண்காட்சி, பஹரி கலைப் பள்ளியில் வரையப்பட்டவை. இதில் இடம்பெற்றுள்ள சில ஓவியங்கள் பெர்சிய மொழிமாற்றம் செய்யப்பட்டவை. இவை மொகாலய மன்னர் அக்பர் காலத்தில் (1556-1605) தயாரிக்கப்பட்டவை. இது அக்பருடைய தாயாரின் விருப்பத்தின்பேரில் வரையப்பட்டவை என்று கூறப்படுகிறது. இந்த ஓவியக் கண்காட்சி குறித்து நாளிதழ்களில் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. கண்காட்சி நடைபெறும் இடத்தில் இந்தியாவின் பாரம்பரிய பொம்மலாட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியை கர்நாடகக் கலைஞர்கள் இருவர் மேற்கொண்டு வருகின்றனர். ராமாயணக் கதைகளை பொம்மலாட்டம் வாயிலாக தத்ரூபமாக கண்காட்சியில் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் இரண்டு வேளை நடத்தப்படும் இக்கண்காட்சி, அடுத்த மாதம் வரை நடைபெற உள்ளதாக அருங்காட்சியகத்தின் இயக்குநர் எபர்ஹார்ட் பிஸ்கர் தெரிவித்தார்.
Average Rating