ஒரு தொகை சட்டவிரோத சிகரட்டுக்களுடன் இருவர் கைது!!

Read Time:1 Minute, 22 Second

சட்டவிரோத சிகரட்டுக்களுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் இருந்து வருகை தந்த இருவரும் விமான நிலையத்தில் இருந்து வௌியேறும் போது சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து 65 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 13,000 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி 650,000 ருபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

29 மற்றும் 42 வயதுடைய இரண்டு பேரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் கொழும்பு மற்றும் மேல் கொட்டரமுல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சிகரட்டுக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சந்தேகநபருக்கு 50,000 ரூபாவும் மற்றைய சந்தேகநபருக்கு 10,000 ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post த்தா கேள்வி கேட்டா கோவிலுக்கு போயிட்ட!! (வீடியோ)
Next post நிஜ வாழ்க்கையில் MGR – Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்!(வீடியோ)