ஆண்கள் சட்டை இப்ப பெண்கள் கவுன்!!(மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 49 Second

மாற்றங்கள் இல்லாவிட்டால் பெண்களின் ஃபேஷன் உலகம் களைகட்டாதே?! அதுவும் ஆண்களுக்கான உடைகளைப் பிடுங்கி அதை பெண்களுக்கானதாக மாற்றுவதில்தான் அவர்களுக்கு எவ்வளவு இன்பம்! ஜீன்ஸ், ஷூவில் ஆரம்பித்து லுங்கிகள் வரை மொத்தமாக ‘லவட்டி’யவர்கள் இப்போது ஆண்களின் சட்டை மெட்டீரியலை அப்படியே தூக்கி பெண்களுக்கு மாற்ற முற்பட்டிருக்கிறார்கள்!

“இந்த உடைகளை உருவாக்கறப்ப கொஞ்சம் தயக்கம் இருந்தது…’’ என்று பேச ஆரம்பித்தார் டிசைனர் திவ்யா. ‘‘எங்க டாம் கேர்ள் லுக் கொடுத்துடுமோ… பெண்கள் மேல ஆண்மையை திணிச்சிடுவோமோன்னு சந்தேகம் இருந்தது. அதனாலயே அந்த மெட்டீரியலை மட்டும் பயன்படுத்திகிட்டேன்.

இதை மதுரை செக்ட் அல்லது சென்னை செக்ட் டிசைன்கள்னு சொல்வோம். மதுரை செக்ட்னா கொஞ்சம் அடர் நிறங்களா இருக்கும். சென்னை செக்ட், லைட் கலரா இருக்கும். அமெரிக்க ஐரோப்பிய நாடுகள்ல இது எப்பவோ பரவிடுச்சு. இந்தியர்கள் இதை ஏத்துக்க கொஞ்ச நாளாகும். இதை புரிஞ்சுகிட்டேதான் ஷர்ட் மெட்டீரியல்ஸை பெண்களுக்கான வெஸ்டர்ன் டிரெஸ்ஸா உருவாக்கினேன். மெட்டீரியலும் பேட்டர்னும் மட்டும் ஆண்கள் ஷர்ட்டுக்கானது. உடை மொத்தமா லேடீஸுக்குதான்.

இந்த டிரெஸ் அணிஞ்சா பெண்களுக்கு தைரியமான லுக்கை தரும். இந்த போட்டோஸை பார்த்தா உங்களுக்கே புரியும். ஷாலியோட மேக்ஸி கவுன்ல, ஆங்கிலோ இந்தியன் ரெட்ரோ ஸ்டைல் இருக்கும். அதே மதுவுடைய நீல வண்ண டாப் கொஞ்சம் கிளாமரா, ஸ்டைலிஷ் லுக் கொடுக்கறதை பார்க்கலாம். வீணா போட்டிருக்கிற க்ரீம் நிற அனார்கலி ஸ்டைல் குர்தா, எந்த உடல் எடை கொண்ட பெண்களும் அணியலாம். மேட்சிங் லெக்கிங்ஸ் கூட அணியலாம். இல்லைனா சிங்கிள் பீஸ் உடையாவும் போட்டுக்கலாம். இங்கிலீஷ் கலர் ஃபார்மல் லுக் கொடுப்பது ப்ளஸ்.

உடைகள் ரொம்ப பாந்தமா, பெண்மையா இருந்தா பெண்கள் இன்னைக்கு விரும்ப மாட்டேங்குறாங்க. அதெல்லாம் வீட்ல அல்லது கல்யாண வீடுகளுக்கான உடைகளா மாறிட்டு வருது. ஒரு மீட்டிங்ல ஆண்களுக்கு நிகரா காண்பிக்க உடைகளும் முக்கிய பங்கு வகிக்குது. அழகான தோற்றத்தை விட தைரியமான தோற்றத்தைதான் இன்னைக்குப் பெண்கள் விரும்பறாங்க. ஐடி, மார்க்கெட்டிங், முக்கியமா பத்திரிகைத் துறைகள்ல பெண்கள் தங்களை தைரியசாலியா காட்டிக்க உடைகள் முக்கிய காரணம்னு நினைக்கறாங்க.

அதேமாதிரி கோட், பிளேஸர் எல்லாம் நம்ம ஊர் வெயிலுக்கு செட் ஆகாதுனு அனுபவப்பூர்வமா புரிஞ்சுகிட்டாங்க. இந்நிலைல இந்த ஸ்டைல் உடைகள் நம்ம பருவநிலையை தாக்குப் பிடிக்கும். ட்ரெண்டியாவும் இருக்கும். இதையெல்லாம் மனசுல வைச்சுதான் இந்த உடைகள டிசைன் செய்தேன். நானே நினைச்சுப் பார்க்கலை இந்த ஸ்டைல் உடைகள் இந்த அளவுக்கு வரவேற்படையும்னு. நிறைய பெண்கள் இந்த மெட்டிரீயல்கள்ல விரும்பி டிசைன் செய்துக்கறாங்க. சிலர் கணவர், மனைவி சகிதமா ஒரே மாதிரி மெட்டீரியல்ல ரெண்டு பேருக்கும் டிரஸ் தைக்க சொல்றாங்க…’’ என்கிறார் திவ்யா.

மாடல்கள்: மதுவந்திதா நாகராஜன், ஷாலி நிவேகாஸ், வீணா ஜெஸ்ஸி, வீரா
மேக்கப் & ஸ்டைலிஸ்ட்: ஜெயந்தி குமரேசன்
உடைகள்: தமாரா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்!!(அவ்வப்போது கிளாமர்)
Next post கணவனின் தொலைபேசியை மனைவி உளவு பார்த்தால் சிறை தண்டனை – புதிய சட்டம் அமுல்!!(உலக செய்தி)