இலங்கையில் கடமையாற்றும் தொண்டர் ஊழியர்களுக்கு புதியவிசா நடைமுறை அறிமுகம்
Read Time:1 Minute, 24 Second
இலங்கையில் கடமையாற்றும் ஐ.நா மற்றும் ஏனைய நாட்டு தொண்டர் ஊழியர்களுக்குப் புதிய விசாமுறையொன்றை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது. வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் இதுதொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கை மனித உரிமை தொடர்பில் பல அரசாங்கங்களின் அறிக்கைகள் முன்வைக்கப் பட்டமையினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது இந்த நடைமுறையின் பிரகாரம் ஒரு தனிநபர் 4வருடங்களுக்கு மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர் இந்த விசாக்கள் ஒருவருட காலம் மட்டுமே செல்லுபடியாகும். இதேவேளை இலங்கையில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல்கள் கொலைகள் காணாமற் போதல் தொடர்பில் ஐ.நாவின் மனித உரிமை ஆணையகம் கண்காணிப்பை மேற்கொண்டு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசு தனது மறுப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
Average Rating