தீவிரவாதிகளை காலவரையின்றி சிறை வைக்க புஷ்சுக்கு அதிகாரம் உண்டு: அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு

Read Time:1 Minute, 30 Second

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட அலி அல்-மர்ரி என்ற தீவிரவாதியை காலவரையின்றி சிறையில் அடைக்க புஷ் அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தீவிரவாதி என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவரை காலவரையின்றி சிறையில் அடைக்க புஷ்சுக்கு அதிகாரம் இல்லை என்றும், அலி அல்-மர்ரியை விடுதலை செய்யுமாறும் கீழ்கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து வெர்ஜினியா மாகாணம் ரிச்மண்டில் உள்ள சர்க்ïட் கோர்ட்டில் அமெரிக்க அரசு அப்பீல் செய்தது. அதை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில், யாரையும் காலவரையின்றி சிறையில் அடைக்க புஷ்சுக்கு பாராளுமன்றம் அதிகாரம் அளித்துள்ளது என்று கூறி, கீழ்கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்தது. அதே சமயத்தில், தனது காவலை எதிர்த்து வழக்கு தொடர அலி அல்-மர்ரிக்கு உரிமை உண்டு என்றும் நீதிபதிகள் கூறினர். இந்த தீர்ப்பை அமெரிக்க நீதித்துறை வரவேற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்தால், வயது வித்தியாசமின்றி 100 வயதிலும் குழந்தை பெறலாம்
Next post ரஜினிகாந்த் படத்தை திரையிட எதிர்ப்பு: கன்னடர்கள் ஆர்ப்பாட்டம்